இலங்கையில் என்றுமில்லாத வரட்சி.

>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: இலங்கையில் என்றுமில்லாத வரட்சி.:       

 * கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலக பிரிவில் பாரிய நீர்த் தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் அங்கு ஒரு லீற்றர் நீர் ஒரு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
*மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளம் நீரின்றி வரண்டிருக்கின்றது. இதனால் அதன் கீழுள்ள 648 குளங்களும் வற்றிக்கிடக்கின்றன.
* இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் வரட்சியினால் 150,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் முற்றாக அழியும் ஆபத்தில் இருப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
* கொத்மல, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து நீரைப் பெறும் விவசாய நிலங்களும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
* பொலன்னறுவயில் 7500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கைவிடப்பட்டுள்ளன. மேலும் 15 ஆயிரம் ஏக்கர் நெல், 50 ஆயிரம் ஏக்கர் ஏனைய பயிர்களும் அழியும் ஆபத்தில் உள்ளன.
* மழை பெய்யாது போனால் நீர் மின்உற்பத்தி முற்றாக தடைப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Eelam News Bulletin - March 2013