அபிப்பிராயம் அடங்கா ஆணவமும், அடங்க வைத்த அவமானமும்: இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 10 மணிநேரம் மர்வான் பிஷாரா அல் ஜசீராவின் மூத்த அரசியல் ஆய்வாளர்.7 அக்டோபர் 2023 அன்று வெளியிடப்பட்டது பாலஸ்தீன பிளிட்ஸ்கிரீக் [Blitzkrieg, (German: “lightning war”) military tactic calculated to create psychological shock and resultant disorganization in enemy forces through the employment of surprise, speed, and superiority in matériel or firepower.] இஸ்ரேலுக்கு ஒரு இராணுவ தோல்வி மட்டுமல்ல மிகப்பாரிய அரசியல் பேரழிவும் ஆகும். மர்வான் பிஷாரா சில தினங்கள் முன்பாக இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தற்புகழ்ச்சி உரையை நிகழ்த்தினார். அதில் இஸ்ரேலையும் அதன் புதிய அரபு பங்காளிகளையும் இணைத்த இஸ்ரேலை மையப்படுத்திய புதிய மத்திய கிழக்கின் உருவாக்க வரைபடத்தை பிரகடனம் செய்தார்.இதில் பாலஸ்தீனம் முற்றாக நீக்கப்பட்டிருந்தது.பாலஸ்தீன தாக்குதல் இஸ்ரேலின் இத்திட்டத்துக்கு அரசியல் ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் கிடைத்த ஒரு மரண அடி ஆகும். பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ், காஸாவிலிருந்