உன்னிச்சைத் தாக்குதல்: ``தமது சொந்தப் பூமியில் மீள் குடியேறி வசிக்க முற்படுவதை தடுத்து நிறுத்தும் சதி முயற்சி``

>>   ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: உன்னிச்சைத் தாக்குதல்: ``தமது சொந்தப் பூமியில் மீள...:

உன்னிச்சையில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்! வதிவிடம்,வர்த்தக நிலையம், வழிபாட்டுத் தலம் தீக்கிரை!       

மன்னார் உப்புக்குளம் சம்பவமும், மட்டக்களப்பு உன்னிச்சைச் சம்பவமும், மீள்குடியேற்றம் எதிர் நோக்கும் பிரச்சனைகளை வெளிக்காட்டுகின்றன. மேலும் இச்சம்பவங்கள் ``யுத்தம் நிறைவடைந்து அமைதிச் சூழ் நிலை நிலவும் காலமாக`` இன்றைய சூழ்நிலை இல்லையென்பதையே காட்டுகின்றன.
இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட சிங்களம், தனது இருப்புக்கு இன ஒடுக்குமுறையை ஆதாரமாகக் கொண்டிருக்கும் சிங்களம், அத்தகைய ஒரு அமைதிச் சூழல் உருவாக அநுமதிக்காது என்பதையும் இச்சம்பவங்கள் விளக்குகின்றன.
எனவே தாக்குதல்தாரிகளைக் கைது செய்து தண்டனைவழங்குவது. மீள்குடியேற்றப் பிரச்சனைகளுக்கு ஜனநாயக ரீதியான தீர்வு காணக்கோருவது, இவற்றுடன் கூடவே இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரிப் போராடுவதும் புரட்சிகர ஜனநாயக தேசிய சக்திகளின் கடமையாகும்.

Comments

Popular posts from this blog

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: Donald Trump: சட்டம் தண்டிக்காது விட்ட குற்றவாளி-அ...

President Mahinda Rajapaksa's TOI Interview-100812

Eelam News Bulletin - March 2013