சமரன்: பதிப்புரை: அந்நிய மூலதனமின்றி சுயேச்சையான வளர்ச்சி...

>> சமரன்: பதிப்புரை: அந்நிய மூலதனமின்றி சுயேச்சையான வளர்ச்சி...:    

ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாடுகளில் அந்நிய மூலதனமின்றி சுயேச்சையான வளர்ச்சிப் பாதை குறித்து : ஜே.வி.ஸ்டாலின்   பதிப்புரை

அந்நிய முதலீடுகள், தாராளமயக் கொள்கைகள் இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளை மட்டும் சீரழிக்கவில்லை. முதலாளித்துவ மையங்களான அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும்கூட பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக தேக்க நிலையை சந்தித்து வருகின்றன. இன்று ஏகாதிபத்திய நிதி மூலதனம் 98 சதவீதம் உற்பத்தியல்லாத ஊக வாணிபத்திலும், பங்கு சந்தை மற்றும் லேவாதேவி
மூலதனமானது செயல்படுகிறது. நிதி மூலதனம் என்றாலே பிற்போக்கு அழுகல் போக்கு என்ற லெனினின் கூற்றுக்கு சான்றாகவே திகழ்கிறது. வளர்ச்சி என்பதே ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் இனி சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய நிதி

மூலதனம் நாடுகளுக்கிடையிலும், ஒவ்வொரு நாட்டிற்குள்ளேயும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தவண்ணம் உள்ளது. காலனிய நாட்டு மக்களும், முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளி வர்க்கமும் கடுமையாக சூறையாடப்படுவதால் மீள முடியாத மிகு உற்பத்தியின் நெருக்கடியில்

நிதிமூலதனம் சிக்கியுள்ள இந்தப் பொருளாதார முறைகளுக்கு மாற்றாக ஒரு புதிய பாதையை தோழர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார். ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை நோக்கிய, மானுடத்தை முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்து மீட்கவல்ல, அப்பாதையை கடைப்பிடிக்கக்கூடிய ஒரு சுதந்திர ஆட்சியை உருவாக்கும் திசையை நோக்கி அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டிய தருணம் இது. அதற்கு இந்தப் புத்தகம் பயனுள்ளதாக அமையும்.

சமரன் வெளியீட்டகம்

Comments

Popular posts from this blog

Eelam News Bulletin - March 2013

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்பட சீனா...